2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

'கல்முனை மாநகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக எட்டு வேட்பாளர்கள்'

Super User   / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செப்டம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மற்றும் கல்முனை மாநகர சபை தேர்தலில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக போட்டியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இதற்கிணங்க கல்முனை மாநகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக எட்டு வேட்பாளர்களும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் சட்டத்தரணியுமான என்.எம்.சஹீட் கொழும்பு மாநகர சபை தேர்தலில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளராக போட்டியிடுவதாக ஹுனைஸ் பாரூக் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காத்தான்குடி, கிண்ணியா மற்றும் ஓட்டமாவடி உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0

  • jaward Monday, 29 August 2011 01:33 AM

    இந்த விளையாட்டு கல்முனை மாநகர சபை தேர்தலில் பலிக்காது பிரதர்......

    Reply : 0       0

    rakkish Monday, 29 August 2011 02:13 AM

    ஆமா கல்முனைல எது நடக்குதோ இல்லையோ.. மறைந்த தலைவர் விட்டுச்சென்ற கட்சி கீதத்த போட்டு யாரு என்ன கதைத்தாலும் எங்கட புத்திசாலி மக்கள் நம்பிடும்.. அப்புறம் அடுத்த தேர்தல்..????

    Reply : 0       0

    ruzny Monday, 29 August 2011 03:18 AM

    ஜவாத் ஏன் பலிக்காது என்று solginrirkal enru enekku puriye ille.

    Reply : 0       0

    siraj Monday, 29 August 2011 06:30 AM

    ஹா ஹா நல்ல புதினமையா இது இவங்க தனித்து கேட்காம சேர்ந்து கேட்க திட்டம் போட்டு கேட்காங்களாம். இல்ல இல்ல நான் ஒன்று கேட்கிறேன் நீங்க யாரு? இந்த அ.இ.ம.கா. என்றால் யாரு எங்கிருந்து வந்திங்க என்று கேட்கிறேன். றிஷாத்துக்கு அரசியலை காட்டியவர்தான் மறைந்த மாமனிதர் அவருக்கே ஆப்பு வைக்க நினைத்த றிஷாத் இன்று அவர் பிறந்த மண்ணில் என்னமோ அவருடைய ஆட்கள் போட்டிருக்காராம்..

    Reply : 0       0

    Maha SMT Monday, 29 August 2011 07:29 PM

    அந்த பருப்பு கல்முனையில் வேகாது .....

    Reply : 0       0

    samrana Monday, 29 August 2011 11:30 PM

    போன தேர்தலுக்கு வந்து போன உங்கட தலைவர் இந்த தேர்தலுக்கு வருவார் . பொய் மூட்டைகளைவிட நோன்பும் முடிகிறது.
    உங்கள் கட்சி சாதனை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்
    * சாய்ந்தமருது சுகாதார நிலைய வரலாறு சொல்லவா ?
    *கல்முனை பொது சந்தை வரலாறு சொல்லவா ?
    *கல்முனை பஸ் நிலைய வரலாறு சொல்லவா ?
    மிகுதி தொடரும் தேர்தலில்..

    Reply : 0       0

    azeez Tuesday, 30 August 2011 04:46 AM

    கல்முனை என்றால் முஸ்லிம் காங்கிரஸ் நான் சவால் விடுகின்றேன்.

    Reply : 0       0

    siraj Tuesday, 30 August 2011 07:09 AM

    போன தேர்தலுக்கு போன தலைவர் அடுத்த தேர்த்லுக்கு வருவார். ஏன்னா அது என்ன நடக்கனுமோ அது சரியான முறையில் நடக்குது. அவருதான் எங்க சூப்பர் ஸ்டாரு, தலைவ. உங்க தலைவரு யாரு? அவரு எங்க இருக்காரு? கொஞ்சம் சொல்லுங்க தம்பி சம்ரனா.பினாடு விக்கிற கதை மாதரி எல்லாம் பேசாம போய் கல்முனை அபிவிருத்தியை பாருங்கப்பா.

    Reply : 0       0

    samrana Tuesday, 30 August 2011 11:19 AM

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கவலை இல்லைதானே . அசீஸ் கல்முனை என்றால் முஸ்லிம் காங்கிரஸ் எண்டு சொல்லும் அளவுக்கு என்ன நடந்திருக்கிறது?
    *நகர மண்டபத்தை டெனிஸ் விளையாட கொடுக்கவா?
    *பொது நூலகத்தை சாக்கடையாக்கி வைப்பதற்கா ?
    யாரும் வீதி இபாலம் கட்ட வந்தால் அதனை தடுப்பதற்கா ? அசீஸ் சிந்திக்க வேண்டும் தொடர்ந்தும் பழைய பல்லவியை பாட முடியாது .நமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலம் வர வேண்டும். நீங்கள் கல்முனையில் சிறிது படித்தவர் சிந்தித்து கருது கூற வேண்டும் .

    Reply : 0       0

    Rizadh Rock Kalmunai Thursday, 01 September 2011 07:01 AM

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் .... என்ன செய்வது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8