2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

நிதி கிடைத்ததும் கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் பிரதேச மக்கள் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்தகால யுத்தத்தினால் இடம்பெயர்ந்த கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேச மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நிதியினை மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் இதற்கான நிதி கிடைத்ததும் இப்பிரதேச மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படுவார்களென திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரட்னம் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள இவ்விரு பிரதேசங்களைச் சேர்ந்த 900 குடும்பங்கள் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி இடம்பெயர்ந்து விநாயகபுரம், தம்பிலுவில், திருக்கோவில் போன்ற பிரதேசங்களிலுள்ள
உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இப்பிரதேச மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது தற்காலிக கொட்டகைகள் நிர்மாணிப்பதற்கு உதவுமாறு அரசசார்பற்ற நிறுவனங்களிடம்
கோரியபோது அவர்கள் இதற்கான நிதி தம்மிடம் இல்லையென தெரிவித்தனர். இந்த நிலையில்,  இவ்விரு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இதற்கான நிதியினை மீள்குடியேற்ற அமைச்சிடம் கோருமாறு தெரிவித்தார்.

இதனையடுத்தே  கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தேவையான நிதி  மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரப்பட்டது.

இதேவேளை,  இப்பிரதேசங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டமைக்கான சான்றிதழை பிரதேச செயலாளரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.  அத்துடன், திருக்கோவிலிலிருந்து தங்கவேலாயுதபுரம் வரையிலான 10 கிலோமீற்றர் தூரம் வரையான வீதியினை யுனெப்ஸ் நிறுவனம் நிர்மாணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8