Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கட்டாக்காலி மாடு முட்டியதில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள அட்டப்பள்ள பிரதேசத்தைச் சேர்ந்த உதுமாலெவ்வை இப்றாஹிம் (வயது 41) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.
முச்சக்கரவண்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென குறுக்கறுத்துச் சென்ற கட்டாக்காலி மாடு முச்சக்கரவண்டியையும் சாரதியையும் பலமாக தாக்கியது. இதில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
siraj Thursday, 01 September 2011 10:22 PM
அநியாயம். இனியாவது இந்த பிரதேச சபையினர் இந்த கட்டாக்காலி மாடுகளை உரியவர்களிடம் கட்டச்சொல்ல வேண்டும். அல்லது இதற்கு சரியானதொரு முடிவெடுக்க வேண்டும். அநியாயமாக கட்டாக்காலி மாடுகளின் தொல்லையால் பாரிய நஸ்டத்தை ஏட்படுத்தும் நிகழ்வுகள் நடக்கின்றன. உடனே நல்ல தொரு பதில் கிடைக்குமா?
Reply : 0 0
ar Friday, 02 September 2011 02:31 AM
irandhavarukkaai pirarthippom. thandanai koduppathenral yarukku koduppathu?
Reply : 0 0
aman Saturday, 03 September 2011 05:47 AM
மரணித்தவர் அட்டப்பள்ளம் இல்லை, ஒலுவிலை சேர்ந்தவர்.
Reply : 0 0
nanban or virothi Sunday, 04 September 2011 03:27 AM
போன உயிர் திரும்ப வருமா இறைவா?
இனியாவது. இந்த மாடுகளை கட்டிப் போடுங்க. எருமைமாடு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago