2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு கடன் மற்றும் வீட்டு உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

மஹிந்த சிந்தனையின் கீழ் ஜனசெவன தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் வசதிகளற்ற 100 குடும்பங்களுக்கு வீட்டு கடன் மற்றும் 60 பேருக்கு வீட்டு உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொண்டு வீடமைப்பு கடன் மற்றும் வீட்டு உறுதிகளை  வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெவ்வை, விமலவீர திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .