Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகரசபையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாநகர மேயர் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகரசபையையும் மாநகரசபையின் கீழுள்ள வர்த்தகர்களையும் இணைக்கும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மாநகர ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
uooran Friday, 28 October 2011 09:59 PM
மேயர் அவர்களே,
சுனாமி இடம்பெற்றதன் பின்னர் கல்முனையை நோக்கி பல அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. விசேடமாக மாநகரை நோக்கி! சரியான ஒத்துழைப்பு இல்லாததால் பல அபிவிருத்தி திட்டங்கள் கை விட்டுப்போகின. குறிப்பாக ஜெயிக்கா திட்டங்கள். எனவே அவர்கள் விடயத்தில் கவனமாக இருக்கவும்.
Reply : 0 0
ar.nilaakp Saturday, 29 October 2011 01:00 AM
அபிவிருத்தி செய்வோரை வாழ்த்துவோம் PARUN THANMAIYUDEN.
Reply : 0 0
UMMPA Saturday, 29 October 2011 02:42 PM
இங்கு திட்டமிடல் முக்கியம். கல்முனையில் நிறையவே எந்திரிகள், வைத்தியர்கள், மற்றும் மற்றைய துறைசார்ந்த வல்லுனர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முஸ்லிமோ, தமிழரோ என்று பிரித்துப்பார்க்காமல் ஒருநாள் கருத்தரங்கை ஒழுங்கு படுத்தி இவர்களின் மூளைபலம்தான் இந்த மாநகரத்தின் உயர்ச்சியாக இருக்கவேண்டும். இதற்கு பழைய புத்தகம் தேவை இல்லாதது. எனவே கிராம அபிவிருத்தி இல்லை, இது ஒரு மாநகர அபிவிருத்தி அது மிகவும் தொழிநுட்பம் கொண்டதாகவும் நீண்ட ஆயுள் கொண்டதாகவும் இருக்கவேண்டும் .
Reply : 0 0
kulathooran Saturday, 29 October 2011 05:21 PM
மேயரே அவர்களே, மைதானம் இருந்த இடத்தில் ஆசுபத்திரியும், பாடசாலையும் அமைந்து இரண்டும் மக்களுக்கு உரிய பயன்பாடுகளை வழங்குகிறதோ இல்லையோ? மைதானம் இல்லாமல் போய்விட்டது, அதற்கும் ஒரு மாற்றீடு தரவும்.
Reply : 0 0
faizmohamed Saturday, 29 October 2011 05:31 PM
நடக்கட்டும் பார்ப்போம்
Reply : 0 0
hutha Saturday, 29 October 2011 05:42 PM
சிராஸ் மீரா சாஹிபின் பணி தொடர வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
1 hours ago