2025 ஜூன் 25, புதன்கிழமை

பற் சுகாதாரம் தொடர்பான வைத்திய முகாம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை ஒக்ஸ்போட் ஆங்கில சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பற் சுகாதாரம் தொடர்பான வைத்திய முகாம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 'தேசிய முன் பிள்ளை பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி' வாரத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பஸீலா அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வைத்திய நிபுணர் டாக்டர் சப்னா, உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஐ.தௌபீக், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அஹமட், அப்பாடசாலை அதிபர் திருமதி ஜீ.என்.இஸ்மாயீல் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் பற்கள் பரிசோதிக்கப்பட்ட உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .