2025 ஜூன் 25, புதன்கிழமை

இளைஞர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் அனுசரனையுடன் சம்மாந்துறை விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் இளைஞர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் யூ.எம்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் வளவாளர்களாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எச்.எம்.பைஷால் அமீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தலைமைத்துவமும் அதன் வகைகளும், தலைமைத்துவத்தின் மனப்பாங்கு, தலைமைத்துவமும் திட்டமிடலும், இளைஞர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .