Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 11 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் வயது (30) கொத்மலை பொலிஸ் பிரிவக்குட்பட்ட கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது மரணத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தையில் சாரதியாக பணியாற்றி வரும் மேற்படி நபர், கடந்;த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் சுவிஸ் மற்றும் சவூதி ஆகிய நாடுகளிலிருந்து வந்த இருவருடன் கதிர்காமம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
எனினும் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்காததையடுத்து வாகன உரிமையாளர் வெள்ளவத்தை பொலிஸில் இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை கண்டி - நுவரெலியா வீதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதாக பிரதேசவாசிகள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கொத்மலை பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
எனினும் சடலம் தொடர்பான அடயாளத்தை உறுதிப்படுத்த முடியாததிருந்ததினால் அடையாளம் காண்பதற்காக பொலிஸார் சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைத்திருந்தனர். முகம் சுற்றிக் கட்டப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்ட இச்சடலம் கழுத்து வெட்டப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி, நுவரெலியா வீதியில் மீட்கப்பட்ட கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டநிலையில் சடலம் தொடர்பாக தகவல் கிடைக்கவே மேற்படி வாகனத்தின் உரிமையாளரும், சாரதியின் நண்பர்கள் சிலரும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குச்
சென்று சடலத்தை பார்வையிட்டனர்.
இதன்போது சடலம் மேற்படி வாகன உரிமையாளரால் தேடப்பட்ட சாரதி கமலராஜ் என்பவருடையது என்று உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக கொத்மலை பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
riswan Thursday, 12 January 2012 05:54 PM
எல்லாம் நல்லம். மிகவும் முக்கியமான செய்தி என்னவென்றால் இதுதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago