Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 14 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து கொள்வதற்காக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிரியாணி விஜயவிக்ரம நேற்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் சகல பகுதிகளையும் பார்வையிட்டார். இதன் பின்னர் வைத்தியசாலை அபிவிருத்தி சபையினர் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.
மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளர் எம்.எப்.றிப்தி முஹம்மட், சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் றியாத் ஏ மஜீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரிடம் வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பான மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
kulathooran Saturday, 14 January 2012 07:52 PM
சிறியானி எம்.பி.அவர்களே உங்கள் வருகை மகிழ்ச்சிக்குரியது, மகஜரை கிடப்பில் போடாமல் சிலவற்றையாவது செய்து தாருங்கள், ஒன்றை ஞாபகத்தில் கொள்ளவும் தேர்தலில் வாக்களிப்போம் எண்டு மட்டும் நம்பிவிடாதீர்கள்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Sunday, 15 January 2012 05:23 PM
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை பார்ப்பது மட்டும் இல்லாமல் நிவர்த்தி செய்ய வாண்டும்
Reply : 0 0
Mohamed Osama Sunday, 15 January 2012 06:36 PM
இதற்கு பதிலாக பியசேன எம்.பி வந்திருந்தால் அபிவிருத்திக்கு சொல்லத் தேவையே இல்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago