2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அப்துல் மஜீத் நினைவு பேருரை

Super User   / 2012 ஜனவரி 15 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அண்மையில் காலம் சென்ற முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீதின் நினைவு பேருரை நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை யுனிவிஷன் அமைப்பின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரட்ன, தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவுரைகளை நிகழ்த்தினர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீத் சமூக சேவராகவும் பட்டின சபை தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் அமைச்சராகவும் சுமார் 34 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்  செய்த சேவைகள் இங்கு நினைவு கூறப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Osama Sunday, 15 January 2012 06:27 PM

    நினைவு தின பேருரைக்கு பார்சல் எதற்கு தவிசாளரே????

    Reply : 0       0

    AHAMED JUNAID Sunday, 15 January 2012 06:39 PM

    சம்மாந்துறை பகுதியில் அதிகமானவர்களுக்கு விசேடமாக மகளிர்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுத்த ஒரு மகனின் நினைவு பேருரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை அதுவும் பெண்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது நன்றியில்லாத வர்களாக நாம் வாழ்கின்றோமா குடும்ப பெண்கள்தான் சபையை ஓரளவு நிரப்பி இருக்கிறார்கள் ...

    Reply : 0       0

    mujahith49 Monday, 16 January 2012 06:04 PM

    தம்பி அது நினைவு மலர் அப்பா ... .எங்கள் தவிசாளர் ஒன்றும் பார்சல் சம்பதப்ட்டவரல்ல , நீதி நியாயம் நேர்மை கொண்ட தலைவன் ......................... புரியும் புரியும்.இன்ஷாஅல்லாஹ் .

    Reply : 0       0

    muhammath Ranoos Monday, 16 January 2012 08:15 PM

    சம்மாந்துறை என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வரலாற்று நாயகன் அமைச்சர் மர்ஹூம் அப்துல் மஜீத்.

    Reply : 0       0

    samman Tuesday, 17 January 2012 05:29 PM

    @osama, it's not a parcel. It's commoneration book of the late Majeed MP. All the muslim community in Sri lanka are saluting the Majeed MP, But osa' expecting parcel.....

    Reply : 0       0

    pasha Tuesday, 17 January 2012 09:17 PM

    ahamed junaid, if the job is given as service to the people, sure people should have come in large numbers.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .