2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாய்ந்தமருது பிரதேச செயலக் பிரிவிற்குட்பட்ட கிராம சேவக உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 26 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராம சேவக உத்தியோஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின்; தலைவர் எம்.வை.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவ்வமைப்பின் ஸ்தாபகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.நழீர , தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் எம்.எச்.ஏ.ஹலீம், பொருளாளர் ஸீ.எம்.ஏ.முனாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்ட சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலவழிகளிலும் செயல்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதில் மிகவும் சிறப்பாக செயற்பட்டமைக்காக கிராம சேவக உத்தியோஸ்தர்கள் பாராட்டி பரிசில்களும் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • நளீம் Thursday, 26 January 2012 06:20 PM

    மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவர்களை வாழ்த்த வேண்டும். அந்தவகையில் கிராமசேவை உத்தியோகத்தர்கள் கௌரவிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்த நட்புறவு ஒன்றியத்தினருக்கு நன்றிகள். இரவு பகல் பாராது அயராது சேவைசெய்யும் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான கௌரவிப்புக்களே அவர்களுக்கு ஊக்கதினையும், மனநிம்மதியினையும் ஏற்படுத்தவல்லது. இங்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்படும் உத்தியோகத்தர் தனது சேவையினை சிறப்பாக மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். சாய்ந்தமருது- 11 பொதுமக்கள் சார்பான பாராட்டுக்கள்

    Reply : 0       0

    ummpa Thursday, 26 January 2012 07:44 PM

    கிராம சேவக உத்தியோஸ்தர்களுக்கு, நமது முதாதையர்கள் மாதரி இறுதிவரை கிராம சேவக உத்தியோஸ்தர் ஆக இருக்காமல் ஜனாப் தௌபீக் அவர்களை பின்பற்றி நடவுங்கள். நீங்களும் பல படி தாண்டி உங்கள் முன்னேற்றம் நாளை சமூக முன்னேற்றம் ! வாழ்த்துக்கள் தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின்ருக்கு.

    Reply : 0       0

    செம்பகம் Thursday, 26 January 2012 08:25 PM

    பெண்பிள்ளை என்றால் உங்களுக்கு சிரிப்போ ஐயோ பரவாயில்லை ஏதோ நல்லத் செய்ரிங்க. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    riswanown Thursday, 26 January 2012 09:37 PM

    சாந்தமருதில் செய்வதட்கும் பாரட்டுவதட்கும் எத்தனையோ விடயங்கள் இருகின்றன. இது ஒரு அரசியல் தந்திரமே !! இந்த பாராட்டு மிகவும் வருந்தத்தக்கது.

    Reply : 0       0

    jes Thursday, 26 January 2012 09:41 PM

    வாழ்த்துக்கள் ஜமீல்

    Reply : 0       0

    pasha Thursday, 26 January 2012 10:20 PM

    when I sent a comment about this GSs work during the tsunami disaster tamil mirror is not publishing it.

    Reply : 0       0

    mohamed Friday, 27 January 2012 08:47 PM

    ரொம்ப நல்ல அரசியல் தந்திரமப்பா........சிரிப்புலேயே விளங்கலேயா ........

    Reply : 0       0

    Marothoor A.M.R Saturday, 28 January 2012 05:16 PM

    இது வேறயா...?? வை திஸ் கொல வெறி ?? நான் போடும் கொமெண்ட்ஸ்ச மட்டும் ஏன் பப்ளிஸ் பண்ண மாட்டிங்களா ?? பயமா ?? கோபமா ??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .