Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 06 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்ற காரணத்தினாலேயே அவரின் அபிவிருத்தி திட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோர் தமிழ்மிரர் இணையத்தளத்தின் சகோதர பத்திரிகையான டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
gnani Wednesday, 07 March 2012 04:05 AM
அப்படி என்றால் அவர் எந்த மாவட்டத்தை சேர்ந்த எம்.பி. என்று சொல்லுங்களேன்.
Reply : 0 0
Anushfair Wednesday, 07 March 2012 01:15 PM
பாவம் முஸ்லிம் காங்கிரஸ். இவரைப்போல ஆட்களை வைத்துக்கொண்டு திண்டாடுகிறது.....
Reply : 0 0
MUHAMMAD Wednesday, 07 March 2012 03:25 PM
தம்பி கனி இது எம்பி பதவி எடுத்தவுடன் எம்பி அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. இனியாவது உங்களப்போல மக்கள் திருந்தினா பசீளுக்கிட்ட கேக்க தேவல்ல அல்லா தர வெப்பான். இனியும் கேவலப்படாம கொஞ்சம் படுத்து உறங்கி மூளைய சுத்தம் பண்ணிக்கிட்டு தெளிவான முறையில கருத்து சொல்லுக்கோ. ஒங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத்து செய்வான்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 07 March 2012 04:16 PM
ஒரு கட்சி பல்வேறு குழுக்கள் ,இப்படி இருந்தால் இவர்கள் என்ன .மக்களும் எற்று கொள்ள மாட்டர்கள்
Reply : 0 0
riyas Wednesday, 07 March 2012 04:51 PM
பைசல் காசிமின் திட்டம் ஏற்றுக் கொண்டால் சரிதானே. நிந்தவுருகுக் மட்டும் எதனை திட்டம் முன் வைக்கிற, நிராகரிப்பு சரிதானே.
ஒரே ஊரில் இரண்டு M P க்களை நியமித்தது யார் மக்களா இல்லை ஹகீம் இந்த பதவிய சம்மாந்துறைக்கு வழங்கலாம் தானே
அஸ்லாம் ஹாஜியார் என்பவர் யார் கிழக்கு மாகாண மக்களே இன்னும் கண்விழிக்க வில்லையா.
Reply : 0 0
Avathaani Wednesday, 07 March 2012 05:52 PM
அப்படி என்றால் அவர் அம்பாறை மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தை சமர்பிக்காமல்
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான திட்டத்தை சமர்பித்திருந்தால் நிராகரிதிருப்பர்களா என்ன......
எங்களுக்கும் பேசத் தெரியும்.
சிங்கம் சைலன்ட இருக்கிறது எல்லாருக்கும் நல்லது .....
Reply : 0 0
gnani Wednesday, 07 March 2012 07:58 PM
சகோ. MUHAMMED அல்லாஹ்ட ரஹ்மத் முழு மானிட சமூகத்திற்கும் அவனது படைபினங்கலான சகல ஜீவராசிகளுக்கும் உரியது. ஆனால் நமது வாக்கை பெற்று எம்.பி.யாகி அமைச்சரானவர்கள் எல்லாம் பசிலை தானே தங்களது ரோல் மொடலாக வச்ச்கிட்டு இருக்காங்க, Avathani குறிப்பிட்டது போல அம்பாந்தோட்டை என்றால்...? ஏற்று கொண்டுவிட்டு அதை வைத்து பிரச்சாரம் செய்து பெருமிதம் கொள்வர்?
Reply : 0 0
dean Wednesday, 07 March 2012 09:27 PM
அது சரி பிரதி அமைச்சர் முரளீதரனும் தேசிய பட்டியல்தானே எப்படி அவரது திட்டங்கள் மட்டக்களப்பில் எடுபட்டது ?
Reply : 0 0
kamran Wednesday, 07 March 2012 11:18 PM
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago