2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாஹித்திய கலாசார விழா

Suganthini Ratnam   / 2012 மார்ச் 23 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் பிரதேச ரீதியாக நடத்தப்பட்டுவரும் பிரதேச சாஹித்திய கலாசார விழா அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலக சாஹித்திய  கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சாஹித்திய  கலாசார பேரவையின் பிரதித் தலைவர் கலாபூஷனம் மாறன் யூ.செயின், கணக்காளர் ஏ.எல்.மஹ்றுப், பதிவாளர் சீ.எம்.எம்.சத்தார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொணடு வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0

  • Maravan Friday, 23 March 2012 06:20 PM

    வெகு விரைவில் தேர்தல் வருகுது போலே .. எல்லாம் இப்பத்தான் தடல் புடல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .