2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; கன்டர்ரக வாகனத்திற்கு தீ வைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 22 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை, அக்கரைப்பற்று வம்மியடி பிரதேசத்தில் கன்டர்ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேற்று வியாழக்கிழமை மாலை மோதி விபத்திற்குள்ளானபோது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியானதைத்; தொடர்ந்து கன்டர்ரக வாகனத்தை பொதுமக்கள்
தீயிட்டு  எரித்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஹதர் அலி றமீஸ் (வயது 28) என்பவரே இந்த விபத்தில் பலியானவராவார்.

அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்றுகொண்டிருந்த கன்டர்ரக வாகனமும்  அக்கரைப்பற்றிலிருந்து குடியிருப்பு பிரதேசத்தை நோக்கிச் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்  பிறேக் பிடித்தபோது மோட்டார்  சைக்கிளில் பின்னாலிருந்தவர் கீழே வீழ்ந்த நிலையில் கன்டர்ராக வாகனம் வீழ்ந்தவர் மீது மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

கன்டர்ரக வாகன சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.  விபத்தில் பலியானவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .