2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மட்டு., அம்பாறை மாவட்டங்களில் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 5 என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இளைஞர் யுவதிகளின் வேண்டுகோளுக்கிணங்க மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவற்றுள் 'ஏ' மற்றும் 'பி' தரமான பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் கற்கை நெறிகளுக்கு இம்மாதம் 9ஆம் திகதியும் ஏனைய தராதரத்தையுடைய நிலையங்களின் கற்கைகளுக்கு ஆகஸ்ட் 20ஆம் திகதியன்றும் மாணவ பயலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட திகதிகள் வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.  விண்ணப்பப்படிவங்களை தமக்கு அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது மாதிரி விண்ணப்பப்படிவங்களை தயாரித்து அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் 067 2251155 அல்லது மட்டு. மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் 065 2240159 ஆகிய என்ற பக்ஸ் இலக்கங்களுக்கு அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.

மட்டு. மாவட்டத்தில், மட்டக்களப்பு (கல்லடி) தொழிற்பயிற்சி நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பாடநெறிக்கும் காத்தான்குடி பயிற்சி நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைக்கும் களுவாஞ்சிக்குடி நிலையத்தில் நீர்க்குழாய் பொருத்துனர், மின்னிணைப்பாளர், தையல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், ஒட்டுவேலை பணியாளர் போன்ற பாடநெறிகளுக்கும்,

ஒந்தாச்சிமடம் பயிற்சி நிலையத்தில் சாரதிப்பயிற்சி, அலுமீனியம் பொருத்துனர், பண்ணை இயந்திர சாதனங்கள் திருத்துனர், வெளியக படகு இயந்திர திருத்துனர், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர் போன்ற கற்கைநெறிகளுக்கும் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம். 

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் கணிணி வரைபட வடிவமைப்பாளர், கணணி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், தையல், சாரதிப் பயிற்சி போன்றவற்றுக்கும் பொத்துவில் தொழிற்பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் மின்னிணைப்பு தொழில்நுட்பம், சமையல்காரர், தொழில்சார் உணவு மற்றும் மென்பானசேவை, மரவேலை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் படநெறிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அக்கரைப்பற்று தொழிற்பயிற்சி நிலையத்தில் மோட்டார் வைண்டிங், மின்னிணைப்பு தொழில்நுட்பம் பயிற்சிநெறிகளுக்கும், காரைதீவு பயிற்சி நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், அலுமீனியம் பொருத்துனர் ஆகிய கற்கைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அம்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் தகவல் தொடர்பாடல்,  தொழில்நுட்பவியலாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், ஆடைத் தொழிற்சாலை தரக்கட்டுப்பாட்டாளர், சிகை அலங்காரம், சாரதிப் பயிற்சி, அழகுக் கலைஞர் பாடநெறிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

சம்மாந்துறை நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் தேசிய சான்றிதழ், மோ.வாகன தொழில்நுட்பம், மோட்டர் வைண்டிங்,வேலைத்தள பகுப்பாய்வு உத்தியோகத்தர், பேக்கரி, கைத்தொழில்துறைசார் தையல் இயந்திர இயக்குனர் கற்கைநெறிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், மேசன், மின்னிணைப்பு தொழில்நுட்பம், நீர்க்குழாய் பொருத்துனர், தையல், ஒட்டுவேலை செய்பவர் ஆகிய பயிற்சிநெறிகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .