2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.கூஇன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை பாலமுனையில் நடைபெற்றது.

பாலமுனை மத்திய குழுவின் தலைவரும் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சரின் இணைப்பாளருமான அதிபர் கே.என்.உபைத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பாலமுனை, சின்னப்பாலமுனை ஆகிய பிரதேசங்களின் மத்திய குழுக்களின் முக்கியஸ்த்தர்கள், கல்விமான்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • rima Thursday, 09 August 2012 09:43 AM

    உங்களால் வெல்ல முடியாது தோல்விதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .