2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கல்முனை மேயருக்கு வியாழன் வரை காலக்கெடு: மு.கா

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கல்முனை மேயர் பதவியை இராஜினாமா மேற்கொள்ளல் தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு காலக்கெடு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

"தனது இராஜினாமா குறித்து 31 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் தான் பதில் வழங்குவாத என்னிடம் உறுதியளித்துள்ளார். அதுவரை பொருத்திருப்போம்" என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது. இதன்போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்ட நிகழச்சி நிரலில் கல்முனை மேயர் விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், ஏனைய விடயங்கள் எனும் நிகழ்ச்சி நிரலில் சம்மாந்துறையை சேர்ந்த அதியுயர் பீட உறுப்பினர் கலீல் மௌலவியினால் கல்முனை மேயர் விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதாவது "கல்முனை மேயர் சர்ச்சை தொடர்பில் ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு என்ன" என்று கலீல் மௌலவி கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தன்னை சந்தித்த கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார் என கட்சி தலைவர் ஹக்கீம் பதிலளித்தார்.

"இதற்கு முன்னர் மாநகர சபையின்  அமர்வினை கூட்ட வேண்டியுள்ளது. அத்துடன், இராஜினாமா குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும் கல்முனை மேயர் தெரிவித்ததாக" அமைச்சர் ஹக்கீம் உயர் பீட கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் தனக்கு வழங்கிய உறுதிமொழிக்கும் தற்போது இடம்பெறும் நிகழ்வுகளிற்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமுமில்லை என கட்சி தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

ஓக்டோபர் 31 ஆம் திகதிக்கு பின்னரே கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா பயணமாகவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் அவர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஏற்கெனவே இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • VALLARASU.COM Monday, 28 October 2013 03:44 PM

    அன்ண்மையில் கல்முனையில் நடந்த கூட்டத்திற்கு இவர்கள் வரவில்லை, இப்போது திருமண வீட்டில் அடுத்த கட்ட நடிப்பு பற்றி தலைவர் சொல்லி கொடுப்பார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .