2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'அழைப்பு விடுக்கப்படாமைக்கு பிரதியமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை வேடிக்கையானது'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'சுயலநலங்களுக்காக மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதனையிட்டு மிக்க மனவேதனை அடைகின்றேன். பாலங்கள் திறப்பு விழாவுக்கு தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஒரு பிரதி அமைச்சர் மேற்கொண்ட நடிவடிக்கை வேடிக்கையானது' என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.

'இது மக்களை குளப்பும் ஒரு நடவடிக்கையாகும். இந்த பாலத்திற்கான அடிக்கல்லினை நான் முதலமைச்சராக இருந்தபோது அதற்குப் பொறுப்பான அமைச்சருடன் நட்டியிருந்தேன். தற்போது அதனை திறந்து வைத்துள்ளோம்' என்றார்.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனை, மட்டக்களப்பில் திங்கட்கிழமை திறந்து வைக்கபட்டதன் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'நாங்கள் மாகாண சபை அரசியலில் இறங்கியபோது துரோகிகள் என்றவர்கள் இன்று காலங்கடந்த பின்னர் இணக்கப்பாட்டு அரசியலில் இறங்கி இருப்பது வேடிக்கையாக உள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்த முடிவினை தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களாயின் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களையும், முள்ளிவாய்க்கால் அழிவினையும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கைதினையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்,
இதுகாலம் கடந்த ஒரு முடிவாகும். நிலைமை அறியாது மீண்டும் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி பேசுவதில் எந்தவித பயனும்கிடைக்கப் போவதில்லை. அது அசாத்தியமான ஒரு விடயமாகும். கிழக்கு கிழக்காகவே இருக்கட்டும்.

கிழக்கு மாகாணம் அகல விரிந்த ஒரு மாகாணமாகும். இதனுடைய நிருவாக அலகுகள் பரவலாக்கம் செய்யப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தின் மத்திய பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் அநை;துள்ளது. எனவே இங்கு நிருவாக அலகுகளை அமைப்பதன் மூலம் மாகாணத்தின் மூவினமக்களும் இலகுவாக சேவைகளை பெறமுடியும்,

இந்த மாகாணத்தின் அபிவிருத்தியானது பொருளாதார அபிவிருத்தியில் தங்கி உள்ளது. அந்த பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவிலான நிதி தேவைப்பாடாக உள்ளது. வரவு, செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 பில்லியன் ரூபாவில் சுமார் 12 பில்லியன் ரூபா சம்பள ஒதுக்கீட்டுக்கே சென்றுவிடும்.

எனவே ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா திட்டங்கள் மூலம் இம்மாகாணத்தில் அதிக நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. மேலும் இதனை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு தொடர்ந்து இருக்க முடியாது. முக்கியமாக கிராமங்களுக்கான பாதைகள் அமைக்கப்படல் வேண்டும். விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் எற்படுத்தப்படல் வேண்டும். நீர்ப்பாசனக்களங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண சபை முக்கிய பங்காற்ற வேண்டும்' என்றார்.

  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 30 October 2013 03:17 PM

    அந்த அமைச்சர் அடுத்த தேர்தலில் தானும் கேட்டு வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்ப்பா... பாவம்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .