2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

ஏனைய பல்கலைக்கழங்களுக்கு முன்மாதிரியாக ஒலுவில் பல்கலைக்கழகம்

Kogilavani   / 2015 ஜனவரி 01 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா


'சர்வதேச ரீதியில் திகழ்கின்ற தென்கிழக்கு பல்கலைக்கழகம் மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழ்கின்றது.

ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று எமது பல்கலைக்கழகமும் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக செயற்படுவது எமக்கு பெருமையை தேடித்தந்துள்ளது' என  தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் ஒலுவில் வளாகத்தில் வியாழக்கிழமை(1) நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 'தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல பரிணாம வளர்ச்சி கண்டு நாட்டின் அபிவிருத்திக்கும், உயர்கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது.

இலங்கையில் காணப்படும் நாற்பதுக்கு மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் எட்டாவது இடத்தை அடைந்திருப்பது இதனை ஆரம்பித்த மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பையே சாரும்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X