2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம்களின் முடிவை வைத்தே நாம் தீர்மானித்தோம்: ஹக்கீம்

Gavitha   / 2015 ஜனவரி 03 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான்

முஸ்லிம்களின் முடிவை வைத்தே நாம் தீர்மானங்களை எடுத்தோம் என்ற ஆத்ம திருப்தியில் இன்று இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, சாய்ந்தமருது கடற்கரை பௌஸி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் இருக்கின்ற முஸ்லிம்களிடத்தில், நாம் மிக புத்தி சாதுரியமாக அரசியல் பிரசாரம் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த பிரசாரம் மூலம் அப்பாவி நாட்டுப்புற பௌத்த மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் அமைதிப்புரட்சிக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாக்கிற விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்கள் ஆட்சிமாற்றம் என்பதை தீர்மானித்து விட்டார்கள் என்றாலும் பேசுகின்ற விடயம் மிக அமைதியாக, புத்திசாதுரியமாக இருக்க வேண்டும்.

இரண்டு பௌத்த மதகுருமாரின் பங்களிப்பில் தான், இந்த அரசாங்கத்தின் அட்டூழியங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது.  அந்த பௌத்த மதகுருமார்கள் தான், இன்று மிகப்பக்குவமாக ஆட்சியாளர்களுடைய அட்டூழியப்போக்கிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

இன்று முஸ்லிம் தலைமைகள் செய்ய வேண்டியது கடினமாக ஒன்றுமில்லை. ஆவேசம், ஆத்திரம், புத்திசாதுரியமாக பேசினால் மாத்திரம் போதும். அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களுக்கு மத்தியில் இருக்கிற அமைதிப் புரட்சிக்கு நாங்கள் வழி விடவேண்டும்.
இந்த அமைதிப்புரட்சியை சீர்குலைத்து விடுகிற பேச்சுக்களை பேசாமல் இருந்தாலே பெரிய விடயம். ஏனென்றால், நாங்கள் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சுக்கும் ஏதாவது தொக்கி நிற்கிற ஒரு விடயத்தை தூக்கிப்பிடித்து, அதற்கு வித்தியாசமாக விமர்சிப்பதற்கு இந்த ஆட்சியார்கள் மட்டுமல்ல, அவர்களின் ஊது குழல்கள், ஊடகங்கள் காத்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X