2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக மைத்திரிக்கு ஆதரவு

Kogilavani   / 2015 ஜனவரி 05 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அநீதிக்கும் குடும்ப ஆட்சிக்கும்  முடிவுகட்டுவதற்காக, மக்கள் ஜனநாயக முன்னணி எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவுக்கு  ஆதரவு தெரித்துள்ளதாக  முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.வை.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நாட்டில் யுத்தம் முடிவுற்று 5 ஆண்டுகள் கடந்தபோதும் யுத்த காலத்தில் இல்லாத பொருளாதார விலையேற்றம் தற்போது காணப்படுகின்றது. பட்டினியால் வாழமுடியாமல் மக்கள் மரணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

புலி இருப்பதாக பூச்சாண்டிகாட்டி சிறுபான்மை இனங்களை நசுக்குகின்றனர். நாட்டில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்ற வருகின்றன.

முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்த நாட்டை பௌத்த நாடாக மாற்றுவற்காக சிறுபான்மை இனமான முஸ்லிம்; மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

அவர்களின் பொருளாதாரம், கல்வி என்பவற்றை சீரழித்துவருவதுடன் இந்த நாட்டில் சிறுபான்மை இனம் அடிமையாக வாழவேண்டும் என்ற நோக்கோடு செயற்பட்டு வருகின்றனர்.  

இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் மீது இடம்பெற்றுவரும் அடக்கு முறைக்கும்  அராஜகத்துக்கும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறிக்கியுள்ளார்.

எனவே மைத்திரிக்கு ஆதரவு வழங்க எமது கட்சி தீர்மானித்துள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X