2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

'உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கு தலைசாய்க்க முடியாது'

Kogilavani   / 2015 ஜனவரி 05 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜே.எம்.ஹனீபா

'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலம் தாழ்தினாலும் மக்கள் விரும்பியவாறு சரியான தீர்மானத்ததையே எடுத்துள்ளது. தலைமைத்துவம், உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை விமர்சிக்கின்ற உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கு நாங்கள் இனிமேல் ஒருபோதும் தலைசாய்க்க முடியாது' என சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உய்ர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹீர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'எமது தலைமைத்துவம் கட்சியின் உள்ளும் வெளியிலும் இருக்கின்ற குத்துவெட்டுக்களுக்கு மத்தியில் மிகவும் பொறுப்புடன் இருந்து முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்காக ஆய்வுகளை செய்தது. இந்த ஆய்வுகளுக்கு பொதுவாக 6000 பேர் உட்படுத்தப்பட்டனர்.

அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் கட்சி பிளவுபட்டுவிடும் என்ற பாரிய சவால்களுக்கு மத்தியிலும்; இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்ற முடிவை மேற்கொண்டது.

சகலவற்றுக்கும் உடன்பாடு தெரிவித்த எமது பிரதேச அரசியல் தலைமைகள், தமது சுகபோகங்களுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் எனக் கருதி கட்சித்தலைமையை விமர்சிப்பதும் தலைவர் பிழையான முடிவுகளை எடுத்துவிட்டார் என்றும் மக்களை தெடர்ந்தும் ஒரு மயக்க நிலையில் வைத்திருக்கவும் முயல்கின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X