2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப் பாதிப்புக்குள்ளானோருக்கு உலருணவு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 06 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 320 குடும்பங்களுக்கான உலர் உணவுகளை ஞானம் அறக்கட்டளை நிதியம்  திங்கட்கிழமை (5) வழங்கியது.

இது தொடர்பில் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த்ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜிடம்  வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 2,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

காரைதீவு பிரதேச வளாகத்தில் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த்ஞானம்;, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X