2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜனவரி 13 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


நெதர்லாந்து அரசாங்கத்தின் 3 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இரு மாடிகளைக்  கொண்ட இரத்த வங்கி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (12) அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்றது.

இரத்த வங்கி பெறுப்பதிகாரி டாக்டர் கே.டி.ஜீ.நதீஜா தலைமையில் இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இதில், வைத்தியசாலையின் தரமுகாமைத்துவ பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிரதம கணக்காளர் பீ.முத்துலிங்கம் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வைத்தியசாலையின் நீண்டகால தேவையாக காணப்பட்ட இரத்த வங்கி  நவீன வசதிகளுடன் அமைக்கப்படுவதனால் அம்பாறை மாவட்டதிலுள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் அதிகம் நன்மையடையவுள்ளனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X