2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

தைப்பொங்கலை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருக்கோவில் பிரதேச சபையினால் புதன்கிழமை(14) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் வி.புவிதராஜன் தலைமையில் நேருபுரம் மற்றும் தாண்டியடி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு தலா 1500 ரூபாய் பெருமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதேச சபை தவிசாளர் வி.புவிதராஜன், உறுப்பினர் பி.விஜயராஜா(வீரா) அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கணேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X