Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜனவரி 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, மாவட்ட செயலக நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினால், பாடசாலை மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (20) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் தலைமையில், நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நுண்ணாய்வு பரிசோதகர் ஏ.ஏ.ஏ.சர்பான் அதிதியாக கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளித்தார்.
கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை எவ்வாறு இணங்காண்பது, காலவதியான பொருட்களை எவ்வாறு அழித்தொழிப்பது, இரசாயனம் கலந்த உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago