Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜனவரி 23 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
'கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண்டும் வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும'; என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில்; அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் கடந்த 2008, 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்று மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி சகல உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாகாண சபையின் கோரிக்கையாக முன்வைத்து வழங்கினோம்.
இந்நிலையில், திடீரென கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென் வேண்டிக் கொள்கின்றேன்.
இன்று வரை கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் உள்ள மாகாண சபையாகும்.
கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், புதிய ஆட்சி மாற்றம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த 2 மாத காலமாக சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்ற போதும் இதுவரையும் உத்தியோகபூர்வமாக எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலை தொடர்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையினால் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மந்தகதியில் இருந்து வருகின்றமை வாக்களித்த மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் செய்யும் துரோகமென்றே நான் கருதுகிறேன்.
ஆட்சி அதிகாரங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் முழு மாகாண சபையையும் மக்களையும் கோமா நிலைக்கு கொண்டு செல்ல கூடாது. உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமூகமானதொரு நடவடிக்கைக்கு கிழக்கு மாகாண சபையை கொண்டுவருவது அரசியல் தலைவர்களின் பொறுப்பும் கடமையுமாகும்.
ஆட்சி மாற்றம் ஏற்படும்போது உத்தியோகபூர்மாக கையளிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. புதிய ஆட்சி மாற்றம் உத்தியோகபூர்வமாக நடைபெறும் வரையில் தற்போதுள்ள ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் கிழக்கு மாகாண நிர்வாகம் நடைபெற்று வந்தாலும் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையினை அடைந்துள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாக ஆளும் கட்சி பெறும்பான்மையை இழந்துள்ளது. அண்மையில் நமது நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் கிழக்கு மாகாண சபையில் எதிர்;க்கட்சி இல்லாத நிலை உருவாகி உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சிகள் இணைந்து ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதனால் இந்த நிலைமை கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளது.
இன்றுவரை ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது. இவ்வாறான நிலைமையின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை எங்களின் கட்சித் தலைமைகளின் அனுமதியை பெற்று எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையில் செயல்படவுள்ளது” என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago