2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா


அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான், எச்.எம்.எம்.பஸீல் 22,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


முதலாவது நபருக்கு ரூபாய் 14,500 அபராதமும் இரண்டாவது நபருக்கு ரூபாய் 7,500 அபராதமும் விதித்து திங்கட்கிழமை(26) நீதவான் தீர்ப்பளித்தார்.


மேற்படி இருவரும் அக்கரைப்பற்று பொலிஸாரால் சனிக்கிழமை (24) கைதுசெய்யப்பட்டனர்.


தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்காமை மற்றும் காப்புறுதிப்பத்திரம், மோட்டார் சைக்கிளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரம் இல்லாமை போன்ற குற்றங்களுக்காக மேற்படி இருவரும் சனிக்கிழமை(24) அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.


இவர்களை திங்கட்கிழமை(26) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


இதேவேளை, முதலாவது நபரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை 6 மாதங்களுக்கு இரத்து செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பணை செய்த பெண்ணுக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ஆறுமாத கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இவர் மீது ஏற்கனவே மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X