2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

வயல் அறுவடை விழா

Thipaan   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள சவளக்கடை விவசாயக் கேந்திர நிலையத்துக்குட்பட்ட பிரதேசத்தில், வயல் அறுவடை விழா திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

விவசாயத் திணைக்களத்தினால் ஐயு - 2 திட்டத்தின் ஊடாக பண்ணை இயந்திர மயமாக்கல் பரீட்சார்த்த நடவடிக்கையின் பொருட்டு, வரிசை விதைப்பு ஒரு ஏக்கர் பரப்பிலும் வீச்சு விதைப்பு ஒரு ஏக்கருமாக மேற்கொள்ளப்பட்டது.

மொத்தமாக 4,575 ஹெக்;டேயர் பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, 4ஆம் கொளனி 2ஆம் கண்டம் வயல்வெளியில் செய்கை பண்ணப்பட்ட வயல் அறுவடை, நாவிதன்வெளி, அன்னமலை பிரதேச விவசாய போதனசிரியர் ஐ.எல்.பௌஸுல் அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.தவனேஸன், விவசாய போதனாசிரியர்கள், விவாசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், விவாசயிகள், விவசாய அமைப்புகளின் பிரநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X