Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்
ஐக்கிய தேசியக் கட்சி கல்முனைக் கிளையின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை மாலை கல்முனை நகரிலுள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிளையின் தலைவர் ஏ.எம்.ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில்,தலைமைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
01. அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில்.
02. ஆரம்ப காலம் முதல் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டி எழுப்பி அதை காத்து வந்த மூத்த ஆதரவாளர்களையும் இளம் தலைமுறையினரையும் ஒன்றிணைக்க வேண்டும்.
03. தேர்தல் காலம் வந்துவிட்டால் நாடகம் ஆடிக் கொண்டு வரும் அரசியல் வியாபாரிகளை எமது கட்சிக்கு இனிமேல் உள்வாங்கக் கூடாது. அவர்களால்தான் எமது கட்சிக்கு கெட்ட பெயர்.
04. தேர்தல் காலங்களில் ஏனைய சிறிய, மதவாத, இனவாத, பிரதேசவாத கட்சிகளை இணைத்து போட்டியிடுவதை தவிர்த்து தனித்துவமாக போட்டியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அம்பாறையில்.
05. கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக இருந்த அம்பாறை மாவட்டத்தை இன்று பறி கொடுத்துவிட்டு இருக்கிறோம். இந்நிலை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். அவர்கள் அப்படி அழிக்க எமது கட்சிதான் இடமளித்தது. இனிமேலும் அவர்களின் சதிவலையிலிருந்து எமது கட்சியை பாதுகாக்க வேண்டும்.
07. எமது கட்சியையும் எமது பிரதிநிதித்துவத்தையும் இனிமேல் தனித்துவமாய் பாதுகாக்க வேண்டும் என்றால் எந்தக் காரணம் கொண்டும் எமது கட்சியுடன் இணைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அம்பாறையில் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது.
08. அம்பாறை மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மூலம் செய்த அபிவிருத்தி சேவைகளுடன் ஒப்பிடும் போது தற்போதுள்ளவர்கள் எதுவும் பெரிதாக செய்யவில்லை. மாறாக தடங்களை அழித்ததுதான் அதிகம். அதை மாற்ற வேண்டும்.
09. கல்முனை மாநகரை எமது கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் அழகிய நகராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவரின் நேரடி கண்காணிப்பில்
10. கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினரால் எமது பகுதியில் பாதிக்கப்பட்ட, மற்றும் பழிவாங்கப்பட்ட எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
11. அன்றிலிருந்து இன்றுவரை எமது கட்சியின் ஆதரவாளர்களை தொடர்ச்சியாக அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டு ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் பழிவாங்கிய வண்ணமே உள்ளனர். இந்நிலையை மாற்ற வேண்டும். அதற்கு பழையபடி எமது கட்சியில் உள்ளவர்கள் எமது அரசியில் அதிகாரத்தை பெற்று எமக்கு விடிவைப் பெற கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12. எமது பகுதியில் உள்ள ஏழை, எளியவர்கள், வீடுகள் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், வசதியின்மையால் கல்வி கற்க கஷ்டப்படும் எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும்.
13. எமது பகுதயில் உள்ள பல்கலைக்கழகம் சென்று உயர் கல்வி கற்க சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க வசதி ஏற்படுத்த வேண்டும்.
14. எமது பகுதயில் உள்ள பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகள், பௌதீக வளங்கள், ஆசிரிய பற்றாக்குறை போன்றவற்றை நிவர்த்தி செய்து சிறந்த கல்வியைப் பெற வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15. வேலையில்லா பட்டதாரிகளுக்கும், வேவைலயற்ற இளைஞர் யுவதிகளுக்கும் வழிகாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16. கல்முனை பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக உரிய இடம் வழங்கப்படாமல் பயிற்சியாளராக இருந்து கொண்டு பல கஷ்டங்களை அனுபவித்து வரும் பட்டதாரிகளுக்கு உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும' என குறிப்பிடப்பட்டுள்ளது.
4 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago