Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கமைய, அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர்.
50 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி பற்றுச்சீட்டை பெற்று ஒரு மாதகாலம் தாண்டியும் மோட்டார் சைக்கிள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் கடமை புரிகின்ற திவிநெகும உத்தியோகத்தர்கள் மற்றும் பெரும்பாலான பிரதேச செயலகங்களின் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கிள் கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட போதும் தங்களுக்கு வழங்கப்படாமை வேதனை தருவதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் விவரித்தனர்.
இது தொடர்பில் உரிய மோட்டார் சைக்கிள் கம்பனியுடன் தொடர்பு கொண்ட போது சைக்கிள்கள் வழங்குவதற்கு தாங்கள் தயராகவுள்ளதாகவும் மாவட்ட செயலகத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறினர்.
ஏவ்வாறாயினும் மோட்டார் சைக்கிள் வழங்கப்படாதோரில் அதிகமானவர்கள் தமிழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என்பதுடன் புதிய அரசினூடாக தங்களுக்கு விரைவில் சைக்கிள்கள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.
4 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago