2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சற்குரு வேலன் சுவாமிகள், அக்கரைப்பற்றுக்கு விஜயம்

Thipaan   / 2015 ஜனவரி 28 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அமெரிக்க ஹாவாய் சிவாய சிவசுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமத்தின் பிரதம குரு 'சற்குரு வேலன் சுவாமிகள்' அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (27) வருகை தந்தார்.

கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் அழைப்பின் பேரில் விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் பிள்ளைகளை ஆசிர்வதித்தார்.

சைவசித்தாந்த கொள்ளைகளை முழுமையாக பின்பற்றி சைவசமயமே மெய்ச்சமயம் என நிரூபித்து, சைவசமயிகள் வாழ்வாங்கு வாழும் முறைமையே நிலைநாட்டி வரும் ஹாவாய் ஆசிரமத்தின் சிந்தாந்த துறவியுடன் சண்முகநாத சுவாமிகளும் வருகை தந்திருந்தார்.

சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் மாணவர்களால் வரவேற்கப்பட்ட சுவாமி நந்திக் கொடியை ஏற்றி வைத்தார். பின்பு நடராஜா பெருமானுக்கான விசேட பூஜையை நடாத்தி வைத்ததுடன் பஜனையில் கலந்து கொண்டார். நிகழ்வின் இறுதியில் சிந்தாந்த கருத்துக்கள் அடங்கிய சமய சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.

நிலையத்தின் தலைவர் த.கயிலாயபிள்ளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் இயக்குனர் சபை உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X