2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புனரமைக்கப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு

Administrator   / 2015 ஜனவரி 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய வீதி புனரமைக்கப்பட்டு, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் செவ்வாய்க்கிழமை (27) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஜெய்கா திட்டத்தின் கீழ் 5.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் கொங்ரீட் வீதியாக இவ்வீதி புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.காசிம், அதிபர் எம்.ஏ.அன்சார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X