2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

3 சிறு தேரர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய தேரருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஜனவரி 28 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்


அம்பாறை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் சிறு பிக்குகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தேரர் ஒருவரை எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரை அங்கொட வைத்தியசாலையில் உளவியல் பிரிவில் அனுமதித்து மருத்துவ அறிக்கை பெறுமாறும் அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த பெரேரா செவ்வாய்க்கிழமை (27) பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


இது பற்றி தெரியருவதாவது,


அம்பாறை நகர் பகுதியில் உள்ள நகவம்புர பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் தலைமை தேரராக 38 வயதுடைய தேரர் ஒருவரும் 9,13,11 வயதுடைய மூன்று சிறு பிக்குகளுமு; விகாரையில் தங்கியிருந்து மத போதனைகளில் ஈடுபட்டுவந்தனர்.


இந்நிலையில். விகாரையின் உள்ள 3 சிறு தேரர்கள் மீது, தலைமை  தேரர் கடந்த சில காலங்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறு தேரர்கள் கொழும்பிலுள்ள தலைமை தேரர் ஒருவருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து, அவர் அம்பாறை நகர பொலிஸாருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.


இதனையடுத்து, பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தேரர் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த பெரேரா முன்னிலையில்  செவ்வாய்க்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டார்.


இதன்போதே, தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரை அங்கொடை வைத்தியசாலையில் உளவியல் பிரிவில் அனுமதித்து மருத்துவ அறிக்கை பெறுமாறும் தெரிவித்தார் நீதிபதி பாதிக்கப்பட்ட சிறு பிக்குகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.


குறித்த தேரர் திருமணம் முடித்து குழந்தைகள் உள்ள நிலையில்,  மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் தேரராகி விகாரையின் தலைமை தேரராக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X