Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜனவரி 28 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கஞ்சாவைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை, பெப்ரவரி 02ஆம் திகதி வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணையை மேற்கொள்ள சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி க.கருணாகரன், இன்று (28) அனுமதி வழங்கியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச வீடொன்றில் 34 கிலோ கிராம் கஞ்சா பொதியை வைத்திருந்த நிலையில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
அம்பாறை விசேட போதை வஸ்து தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (27) மாலை பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சாவையும் இரு சந்தேக நபர்களையும் மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக பொலிஸார் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கமைய, தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அம்பாறை விசேட போதை வஸ்து பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யு. வசந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் சாஜன்களான ஐ.ஆர். காமினி, றபீக், பொலிஸ் உத்யோகஸ்தர்களான நிமால், தஸாநாயக்க, சமிந்த, றிபாய், இந்திக்க ஆகியோர் இந்த பொலிஸ் குழுவில் அடங்குகின்றனர்.
6 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago