Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
வலது குறைந்தவர்களுக்கான உபகரணங்களும் சுயதொழில் உதவிப் பணமும் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு உபகரணங்களையும் சுயதொழில் உதவிப் பணத்தொகையையும் வழங்கி வைத்தார்.
இங்கு, சக்கரக்கதிரை ஒருவருக்கும் வெள்ளைப்பிரம்பு ஒருவருக்கும் மூக்கு கண்ணாடி மூவருக்கும் வழங்கப்பட்டதுடன் சுயதொழில் கொடுப்பனவு தலா ரூபா 30ஆயிரம் வீதம் 20பேருக்கும் தற்செயல் நிவாரணம் தலா ரூபா 10ஆயிரம் வீதம் 10பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
மாகாண சமூகசேவை திணைக்களம் இதற்குரிய நிதியை வழங்கியிருந்தது.
6 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago