Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
கிழக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2இல், உத்தியோகத்தர்களை நியமிக்கும் போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் தமிழர்களுக்கான வெற்றிடங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளமை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட 2015ஆம் ஆண்டுக்காக, மாவட்ட மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்ததும் மட்டுப்படுத்தப்பட்டதுமான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் பத்திரிகை செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களில் சமூக சேவை உத்தியோகத்தருக்கான வெற்றிடங்கள் உள்ளபோதும் வெற்றிடங்கள் இல்லை என கிழக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பத்திரிகை மூலமான விண்ணப்பம் கோரலில் வெளியிடப்பட்டமை முறையற்றது எனவும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் இளைஞர், யுவதிகள்; கவலை தெரிவித்தனர்.
இதனால்; இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் யாரும் முன்வரவில்லை எனவும் தெரியவருகின்றது.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சுமார் ஒருவருடத்துக்கு மேலாக இப்பதவிக்கான வெற்றிடம் நிலவுகின்ற வேளையில் இவ்வாறாக வெளியிடப்பட்டமை நியாயமற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த வாரம் முதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இப்பதவிக்கான வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
7 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
3 hours ago