Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கல்முனை பிரதேசத்திலுள்ள பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (01) கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
பாண்டிருப்பு பிரதேச இளைஞ்சர்களால், மாகாணசபை உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் இந்தப் பணி இடம்பெற்றது. ஏற்கனவே கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவரினால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டு 12 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபையினால் ஒதுக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்துக்கான வேலை அங்கு சரியான முறையில் இடம்பெறவில்லை என அதிருப்தியுற்ற இளைஞர்கள் மாகாண சபை உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதையடுத்து மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் தனது சொந்த முயற்சியின் மூலம் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசம் முழுவதையும் அழகுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். இந்த பணியில் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
4 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago