Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை ஒலுவில் துறைமுக நிர்மாணம் காரணமாக ஒலுவில் கடற்கரையை அண்டிய கரையோரப் பிரதேசம் மற்றும் வெளிச்ச வீட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்புக் காரணமாக, சுமார் 200 மீற்றருக்கு மேற்பட்ட நிலப்பிரதேசம் கடலரிப்பின் காரணமாக கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுள்ளப்படுகின்றது.
மேலும் அங்கிருக்கும் ஆறு ஒன்றுடன் - கடல் கலந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, அங்குள்ள மீனவர்களின் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கரையோரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வாடி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புக்களும் நாளடைவில் பாதிக்கப்படலாம் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஒலுவில் துறைமுகத்துக்கு அருகிலுள்ள பகுதிகள் கடந்த காலங்களில் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதனால், சுமார் 200 மீற்றருக்கு மேற்பட்ட நிலப்பகுதி, இதுவரை கடலுக்குள் சென்றுள்ளது. இந்த நிலப்பகுதிகள் தென்னந் தோப்புகளாகவும் மீனவர்களின் வாடிகள் அமைக்கப்பட்ட தொழிலிடங்களாகவும் இருந்தவையாகும். ஆனால், தற்போது, இவை இருந்த இடம் தெரியாமல் கடலரிப்புக்கு உள்ளாகி, கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்த, ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளன.
மேலும் மீனவர்களின் தொழிலிடங்களும் கடலரிப்பால் காவு கொள்ளப்பட்டுள்ளமையினால், ஒலுவில் பிரதேச மீனவர்கள்
தமது மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
கடலரிப்பினைத் தடுக்கும் நோக்கில், கடலுக்குள் பாரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ளபோதும், கடலரிப்பின் தீவிரம் குறையவில்லை எனவும் இந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, துறைமுக வெளிச்ச வீட்டின் அடித்தளப் பகுதிகளும், கடலரிப்பினால் சேதமடைந்துள்ளன.
இவ்வாறானதொரு நிலையில், கடலிலிருந்து பல நூறு மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த ஆறொன்றுடன், தற்போது கடல் சங்கமிக்கும் நிலையொன்று உருவாகியுள்ளது.
இந்த நிலைமையானது, எதிர்காலத்தில் அங்குள்ள குடியிருப்புகளுக்கு பெரும் ஆபத்தாக அமையலாம் எனவும் ஒலுவில் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்புத் தொடர்பிலும், இதனை தடுத்து நிறுத்துவற்காக உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும், கடந்த காலங்களில், அரசாங்கத்திடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், ஆக்கபூர்வமான எதுவித நடவடிக்கைளும் மேற் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்படுள்ள கடலரிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago