2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஒலுவில் துறைமுக ஆளணிக்கு, ஒலுவில் பிரதேச இளைஞர்களுக்கு முதலிடம்: அர்ஜூன

Gavitha   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்,எம்.எஸ்.எம். ஹனீபா

ஒலுவில் துறைமுகம் இயங்கச் செய்யும் போது, அந்தப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என துறைமுக கப்பல்போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்தார்.

ஒலுவில் வர்த்தக மற்றும் மீன்பிடி துறைமுகங்களை சனிக்கிழமை (14) பார்வையிட்டதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஒலுவில் துறைமுகம் இயங்க ஆரம்பித்ததும் துறைமுகத்துக்கான ஆளணியினருக்கான தேவை ஏற்படும்.

இதற்கான ஆளணியினர் தேவை ஏற்படும் பட்சத்தில் இந்தப் பிரதேசத்திலுள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

இதன்போது, துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அவர், அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது, அமைச்சருடன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

துறைமுக கப்பல் போக்குவரத்து அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க, துறைமுக நடவடிக்கைகளை அவதானிக்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை (13) காங்கேசன் துறைமுகத்துக்கும் சனிக்கிழமை (14) காலை திருகோணமலை துறைமுகத்துக்கும் ஒலுவில் துறைமுகத்துக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X