Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார், எம்.எஸ்.எம்.ஹனீபா
நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் சம்மாந்துறை பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீர்பாசனத்துறை மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் திருமதி அனோமா கமகே தெரிவித்தார்.
சம்மாந்துறை, சென்னல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற விவசாயப் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'இலங்கையின் நெல் உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் 23 சதவீதமான நெல்லை உற்பத்தி செய்கின்றது. அதிலும் விஷேடமாக சம்மாந்துறை பிரதேசம், நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்த வகையில் சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்ககின்ற விவசாயப் பாதைகள், குளங்கள் என்பவற்றை அவிவிருத்தி செய்யவுள்ளேன். உங்களது பிரச்சினைகள் அனைத்தையும் இங்குள்ள சம்மாந்துறைப் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் றிப்னாஸிடம் ஒப்படையுங்கள். அதனை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், அம்பாறையில் நீர்பாசன அமைச்சுக்கான காரியாலயம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்து. அதில், பொறியியலாளர் உட்பட பல அதிகாரிகள் 5 தினங்களும் கடமையாற்றுவார்கள். உங்களது பிரச்சினைகளை அங்கு தெரிவியுங்கள். அவற்றை நான் தீர்த்துவைப்பேன்.
இந்த போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து அரச உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்து உடன் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏதிர்வரும் மாதத்திலிருந்து 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் வைத்திய முகாம்களை நடத்தவுள்ளோம். அத்துடன், நடமாடும் சேவையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஜக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஹசன் அலி, நீர்பாசன பொறியியலாளர் றிப்னாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago