2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பள்ளிவாசலுக்கு பொருட்கள் அன்பளிப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்கள் மற்றும் அல்-குர்ஆன் பிரதிகள், ஞாயிற்றுக்கிழமை(15) அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசல் தலைவர் யு.கே.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் ஆரிப் சம்சுதீன், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல் நஸீர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இரண்டு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் கதிரைகள், தளபாடங்கள் மற்றும் குர்ஆன் பிரதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம்  இதன்போது கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X