Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 16 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வர்த்தக நிலையங்களில் இதுவரை பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதிய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கடைகளில் விலைகள் இதுவரை குறைக்கப்படவில்லை.
இங்குள்ள வியாபாரிகளில் பலர் முன்னைய விலைக்கு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
தேநீர் கடைகளில் பால் மற்றும் சாதாரண தேநீர் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்படமாலும் பேக்கரிகளில் தயாராகும் உணவுப் பண்டங்களின் விலைகளும் குறையவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக நிலையங்களில் நுகர்வோரின் பார்வைக்கென பொருட்களின் புதிய விலைப்பட்டியலை காட்சிக்கு வைக்குமாறும், பொருட்களுக்கான விலை குறைப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago