Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் நலன் கருதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடர்பு சாதனத்துறை டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பிக்குமாறு தேசிய ஐக்கிய சுதந்திர ஊடவியலாளர்கள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜக்கிய சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜௌபர், செயலாளர் ஐ.எச்.ஏ.வஹாப் ஆகியோரால் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். முஹம்மது இஸ்மாயிலுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஊடகவியலாளர்கள் தங்களது தொழில் திறமைகளை மேம்படுத்திக்கொள்வதற்கு வழிவகுக்கும் எசிதிசி ஊடகப் புலமைப் பரிசில் திட்டத்துக்கு வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
உள்ளுர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்க உயர் கல்வி பயிற்சி நிறுவனங்களினால் நடத்தப்படும் பட்டப்படிப்பின், குறுகிய கால, நீண்ட கால சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் நிறுவனங்களில் முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் சுதந்திர ஊடகவியலாளர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் மூன்றாண்டு கால சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்திருத்தில் வேண்டும்.
வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சினால் வருடாந்தம் அமுல்படுத்தப்படும் அசிதிசி புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபாய் வரையான நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. புலமைப்பரிசிற்க்குரியவரின் பாடநெறிக் கட்டணமாக குறித்த நிதி செலுத்தப்படும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பு சாதனத்துறை டிப்ளோமா மற்றும் சான்றிதல் கற்கை நெறிகள் எதனையும் நடத்தாதனால் அசிதிசி ஊடக புலமைப்பரிசில் கற்கை நெறிக்கான நிதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த நிதிச் சலுகையை பிராந்திய ஊடகவியலாளர்கள் பெற்றுக் கொள்ளத்தக்கவகையில் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கற்கை நெறியை ஆரம்பிக்க வேண்டும்' என அம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலமைப்பரிசில் பெற விரும்புபவர்கள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்கங்களை பணிப்பாளர் (ஊடகம்) வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு இல.163, கிருலப்பனை மாவத்தை, கொழும்பு-5 என்ற முகவரிக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி முன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago