2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

30 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறை கட்டடம் திறப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சம்மாந்துறை வலய நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள மத்தியமுகாம் ஸ்ரீமுருகன் தமிழ் வித்தியாலத்தில்  ரி.எஸ்.ஈ.பி திட்டத்தின் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் பாவனைக்காக திங்கட்கிழமை (16) கையளிக்கப்பட்டது.


ஸ்ரீமுருகன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.கதிரைநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், நாவிதன்வெளி கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்மூத்லெப்பை, பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டதன் பயனாக நீண்டகாலமாக மாணவர்கள் எதிர்கொண்ட வகுப்பறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X