Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்று நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளமை எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி தெரிவித்தார்.
சம்மாந்துறை, சென்நெல் கிராமத்தில் நீர்ப்பாசனத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(15) சம்மாந்துறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மைத்திரி ஆட்சி உதயமானதுடன் நாட்டில் ஒருவகையான நிம்மதியும் இன ஒற்றுமையும் சிறுபான்மை இன மக்கள் மனங்களில் குடிக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இருந்தாலும் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மஹிந்த இன்னும் விடுபடவில்லை. அதிகார ஆசையில் இருந்து ஓயவில்லை. ஏதோவொரு வழியின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு வருவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் அவர் முயர்ச்சி செய்கிறார். மீண்டும் ஊழல் மிக்க குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்து நாட்டைச் சீரழிக்க முற்படுகிறார்.
நாட்டில் நல்லாட்சியை தோற்றுவிக்கும் நோக்கில் ஆட்சி மாற்றத்துக்கு சம்மாந்துறைத தொகுதி மக்கள் 83வீதமான வாக்கை வழங்கியுள்ளனர். மக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பில் உறுதியாக இருந்தமையினாலேயே முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டது. இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தொடர்ந்தும் செய்து கொண்டு வருகின்றது.
ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன் போன்ற அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுக்க முன்னராகவே முஸ்லிம் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். இதனாலே இவர்கள் பொது அணியோடு இணைந்தார்கள்.
அமைச்சுப் பதவிகளையும் பெற்றார்கள். இல்லையெனின் அவர்கள் மஹிந்தவோடு இணைந்திருப்பார்கள். இவர்களுக்கு தேவை அமைச்சுப் பதவிகள்தான். சமூகத்தை பற்றிய சிந்தனை இல்லை.
எதிர்வருகின்ற பொதுத் தேர்தலானது, நாட்டில் அரசியல் களத்தில் புதுவிதமான சுழலை தோற்றுவிக்கவுள்ளது.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கிலே பாரியளவில் சரிவுகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயர்ச்சிக்கின்றது.
முடியுமானால் அவர்களால் தனித்துப்போட்டியிட்டு வெற்றியீட்டுக்காட்டும். மக்கள் முஸ்லிம் காங்கிரஸிக்கு பதிலடி கொடுக்கவுள்ளனர்' என்றார்.
இந்நிகழ்வில் விவசாய நீர்ப்பாசத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago