2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மீள்குடியேற்றக் கிராமத்துக்கு மின்சார விநியோகம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் மீள்குடியேற்றக் கிராமத்துக்கான மின்சார விநியோகத்திட்டத்தை முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, புதன்கிழமை (18) திறந்து வைத்தார்.

சுமார் 45 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கிராமம், கடந்தகால யுத்தத்தத்தால் பாதிக்கப்பட்டு மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இழந்திருந்தது.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாஸிகின் முயற்சியினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் நிதியொதுக்கீட்டின் மூலம் இக்கிராமத்துக்கான மின்சார விநியோகம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பனையறுப்பான் கிராமத்தின் ஸ்தாபகரும் மஸ்ஜிதுர் றஹ்மான் பள்ளிவாயலின் தலைவருமான எம்.ஏ.உமர்ஹாஜியாரின் சேவையைப் பாராட்டி முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தவிசாளர் எம்.ஏ.றாஸிக், மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X