2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கையடக்கத்தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளை

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்


அம்பாறை, அக்கரைப்பற்று பஸ் நியைத்துக்கு அருகிலுள்ள கையடக்கதொலைபேசி மற்றும் கணினி இறுவெட்டு விற்பனை நிலையத்தில், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கணினி உதிரிபாகங்கள் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


கடையின் உரிமையாளர் கடையை வழமைபோல் பூட்டிவிட்டு சென்றுள்ளதுடன் இன்று வியாழக்கிழமை காலை வந்து பார்த்தபோது கடையின் பின்கதவு உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 4 விசைப்பலகைகள்;, 45 மெமரிசிப், 15 யு.எஸ்.பி, மீடியாபிளேயர் 18, கணினி இறுவெட்டு ரைடர் 4  என்பவை திருடப்பட்டுள்ளதை அறிந்து பொலிஸில் முறையிட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X