2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விவசாயிகளிடமிருந்து புதிய விலையில் நெல் கொள்வனவு

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ், எம்.எஸ்.எம். ஹனீபா

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டமைக்கிணங்க, புதிய விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள நெற் களஞ்சியசாலையில் பெரும்போக நெலலை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நெல் கொள்வனவு நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயாகமகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, கீரிச் சம்பா மற்றும் சம்பா இன,நெல் வகைகள் ஒரு கிலோ 50 ரூபாயுக்கும் ஒரு கிலோகிராம் நாடு இன நெல் 45 ரூபாயுக்கும் கொள்ளவனவு செய்யப்பட்ன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X