2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மு.கா. கிழக்கு மாகாண சபை நடவடிக்கையை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது

Kogilavani   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் நியமனம் சுமூகமாக இடம்பெற்றுள்ள சந்தர்ப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கிழக்கு மாகாண சபை நடவடிக்கையை முடக்குவதற்கான ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்க முயன்றுவருவது கவலைக்குரிய விடயமாகுமென  நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.


தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம் வியாழக்கிழமை(19) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்,


கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பிலான விடயம் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களினால் கலந்தாலோசிக்கப்பட்டதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது.


ஆனால், முதலமைச்சை பெற்றதன் பின்னர் மறுகனமே எந்தவிதமான ஆலோசனையும் பெறாமல் மு.கா. தன்னிச்சையாக மாகாண சபையின் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.


ஏனைய கட்சிகளின் ஆலோசனையைப் பெறாமல் மாகாண சபையில் தேசிய அரசாங்கம் அமைப்பது என்றும் அமைச்சுப்பதவிகளை பங்கிடுவதிலும் மு.கா. செயற்படுவது மாகாண சபை நடவடிக்கைகளை மீண்டும் ஒரு இழுபறி நிலைக்கு கொண்டு செல்வதாகவே அமையும்.


மேலும் கிழக்கு மாகாண சபையில் கட்சி தாவிய சிலரும் ,ருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கட்சிகளினால் விளக்கம் கோரப்பட்டுள்ளன.  அவர்களின் பதில் கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X